கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன.
பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலம் முழுவதும் இந்த ஸ்டிக்கர் செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்காக ஒருநாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர் நடைமுறை நேற்று வரை அமுலில் இருந்த நிலையில், இன்று முதல் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் தாமதம் மற்றும் அசௌகரியங்களை குறைக்கும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.