நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு, 5 பேர் காயமடைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதேநேரம், 10 மாவட்டங்களின் 88 பிரதேசங்களிலுள்ள 67 ஆயிரத்து 613 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 71 ஆயிரத்து 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பாதிப்புக்குள்ளானவர்களில் 6 ஆயிரத்து 177 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 806 பேர் 106 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 5 ஆயிரத்து 710 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்து 975 பேர் தங்களது உறவினர்களது வீடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த அனர்த்தங்களால் 17 வீடுகள் முற்றாகவும் 978 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.