மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
நாளைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 25 ஆயிரம் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் நாளை முதல் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் ஒவ்வொரு சுகாதார திணைக்கள பகுதிகளிலும் ஆபத்து நிலை அதிகமுள்ள பகுதி மக்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுதடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.