மேற்கு வங்க மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் ஒரேநாளில் இருபதிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், மின்னல் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு 26 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிவாரணமும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.