நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரேமலால் ஜயசேகர மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இன்றைய நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அதன்படி, பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லுமாறு சிறைச்சாலை ஆணையாளர் நாயகதிற்கும் ரிஷாட் பதியுதீனை அழைத்து வருமாறு சிஐடி பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.