ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட ‘மூன்றாம் வகுப்பு’ ஊடகவியலாளர்கள் என யாரும் இல்லை என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஊடக மாநாடொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் கடந்த காலத்தில் கொல்லப்பட்ட சில ஊடகவியலாளர்கள் மூன்றாம் வகுப்பு ஊடகவியலாளர்கள் என விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அமைச்சர் கெஹெலிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஹேரத் கருத்துக்கள் தங்களைக் குறிப்பதாக ஊடகவியலாளர்கள் தங்களைத் தாங்களே எடுத்துக்கொண்டால், தான் அதைப் பற்றி வருந்துகிறேன் என்றும் எந்தவொரு உறுப்பினரும் மூன்றாம் வகுப்பு என்று அழைக்கப்படுவதை தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஹேமந்த ஹேரத் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஊடக உரிமைகள் குழுக்கள் கோரியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.