வவுனியா சாந்தசோலைப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதாரபரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சுகாதாரபரிசோதகர் நேற்றயதினம்(புதன்கிழமை) மாலை சாந்தசோலைப்பகுதியில் கடமை நிமித்தம் சென்றிருந்தார்.
இதன்போது முகக்வசத்தை சீரான முறையில் அணியாமல் வீதியால் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது அதனை சீராக அணியுமாறு சுகாதார பரிசோதகர் எச்சரித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த இளைஞர் சுகாதார பரிசோதகரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவித்து சுகாதார பரிசோதகர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருவதுடன் தாக்கியதாக சந்தேகிக்கும் நபரை கைது செய்துள்ளனர்.