பிரித்தானிய தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய பத்து பேர் ஆப்கானிஸ்தானில், சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஹலோ டிரஸ்ட் தொண்டு நிறுவனம் மற்றும் ஆப்கானிஸ்தான் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான பாக்லானில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 16பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் டோலோ நியூஸ் தளம் பகிர்ந்த காணொளியில், காயமடைந்தவர்களை மாகாண தலைநகர் புல்-இ-கும்ரி மருத்துவமனைக்கு அழைத்து வருவது காட்டப்படுகின்றது.
அருகிலுள்ள வயலில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றிய அடுத்த நாளில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
இஸ்லாமிய அரச குழுவான (ஐ.எஸ் அமைப்பு) தான் இந்த தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அரபு மொழி அறிக்கையில், ‘கண்ணிவெடிகளை அகற்றிய தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லட்டதாவும் அவர்களின் உபகரணங்களை கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 1ஆம் திகதியில் இருந்து அமெரிக்கா தனது கடைசி துருப்புக்களை திரும்பப் பெறத் தொடங்கியதில் இருந்து ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் தலிபானுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளில் இணக்கம் ஏற்பட்ட நிலையில் சர்வதேச துருப்புக்கள் வெளியேறுவது வந்துள்ளது.