நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, அரசியல் கட்சிகளின் கூட்டுபொறிமுறையொன்று மிகவும் அவசியமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,“தற்போதைய சூழ்நிலையில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி, கூட்டுபொறிமுறை ஒன்றினை உருவாக்க வேண்டியது அவசியமான தேவைப்பாடாக இருக்கின்றது.
அதாவது அரசியல் கட்சிகள் எவ்வாறு தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாக பொறிமுறை ஆவணமொன்றினை உருவாக்க வேண்டும்.
எதிர்வரும் பத்து வருடங்கள் ஆட்சி செய்யும் விதத்தில் இந்த பொறிமுறை அமைய வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிந்தைய சூழலை நாடு எதிர்கொள்ளவேண்டும் என்பது தொடர்பாக தயாரிக்கப்படும் இந்த ஆவணத்தை உருவாக்கும் விடயத்தில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியமான பங்களிப்பை வழங்க அனுமதியளிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.