சஹ்ரான் ஹசீம் மற்றும் அவரது குழுவினருக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு தங்குமிட வசதி வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த இருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகரியாவ பகுதியை சேர்ந்த 47 வயதுடைய உப தபால் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் மற்றைய நபர் 35 வயதுடைய மட்டக்களப்பு சிறைச்சாலை கைதி என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.