வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக கிழக்கு இந்திய பகுதிகள், மற்றும் அதனை ஒட்டிய மத்திய இந்தியப் பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
ஒடிசா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வங்ககடல் பகுதியில் பலத்த காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.