பிரித்தானியா கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகளில், இந்தியக் கொவிட்-19 மாறுபாடு, 91 சதவீதம் உள்ளதாக சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பொதுசுகாதாரத் துறையின் எச்சரிக்கைக்கு மத்தியில், இந்த நோய்த்தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட இந்த மாறுபாட்டின் ஆதிக்கம் வியாழக்கிழமை 91 சதவீதம் என ஒரு மதிப்பீட்டில் இருந்து வந்தது என சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்தார்.
கென்ட் (ஆல்பா) மாறுபாட்டை விட டெல்டா சுமார் 40-60 சதவீதம் அதிகமாக பரவும் என்று நம்பப்படுகிறது.
மேலும் பெப்ரவரி முதல் தொற்றுகளை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டுச்செல்ல உதவியதாகத் தெரிகிறது.
புதன்கிழமை 7,500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளனர். கிட்டத்தட்ட 7,400 வியாழக்கிழமை பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் டெல்டா கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வடமேற்கு போன்ற சில பகுதிகளுக்கு கூடுதல் சோதனை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், ஃபைசர் அல்லது அஸ்ட்ராஸெனெகா ஆகிய இரண்டு அளவுகளையும் கொண்ட நபர்கள் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக வலுவான பாதுகாப்பைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.