பொய்யான கொவிட் தடுப்பூசி வழிகாட்டுதல்களை உருவாக்குவதில் ஈடுபட்டமைக்காகவும் 25,000 முதல் 30,000 தடுப்பூசி குப்பிகளை வீணாக்கியதற்காகவும் தொற்றுநோயியல் பிரிவின் சிறப்பு மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ கூறுகையில், “வத்துபிட்டிவல வைத்தியசாலையிலுள்ள ஒரு குளியறையில் இருந்து மீதமுள்ள இரண்டு அல்லது மூன்று டோஸுடன் கோவிட் தடுப்பூசி குப்பிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
ஆரம்ப கோவிஷீல்ட் தடுப்பூசி வழிகாட்டல் அனைத்து சுகாதார சேவை அதிகாரிகளுக்கும் மற்றும் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தொற்றுநோயியல் பிரிவின் நிபுணர்களால் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு குப்பியில் பத்து அளவுகள் உள்ளன.
இருப்பினும், தொற்றுநோயியல் பிரிவு ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதாவது ‘இறுதி டோஸுக்குப் பிறகு ஒரு சிறிய அளவிலான தடுப்பூசி இருந்தால், அது மற்றொரு நபருக்கு பயன்படுத்தப்படக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவை அதிகாரிகள், தொற்றுநோயியல் பிரிவு வழிகாட்டுதல் தவறானது என்றும் தடுப்பூசி இன்னும் பயன்படுத்தப்படாமலும் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
இதேவேளை வழிகாட்டுதல்களை அமுல்படுத்திய பின்னர், திட்டத்தின் முதல் கட்டத்தில் சுமார் 25,000 முதல் 30,000 தடுப்பூசி குப்பிகள் வீணடிக்கப்பட்டுள்ளன.
மேலும் தொற்றுநோயியல் பிரிவு முதல் வழிகாட்டுதல்களைத் திருத்தி, அவற்றின் இரண்டாவது வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
அதில் AD ஐப் பயன்படுத்தி தடுப்பூசி குப்பியின் பத்தாவது அளவைத் திரும்பப் பெற்ற பின்னர், அளவு கூடுதலாக 0.5 மில்லி இருந்தால், தடுப்பூசி குப்பியில் இருந்து பதினொன்றாவது அளவைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.