மட்டக்களப்பில் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிப்புரிவோருக்கான சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு- ஊறணியிலுள்ள அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
இதில் சுமார் 600க்கும் மேற்பட்ட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு, தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.மயூரனின் தலைமையில் மட்டக்களப்பு சுகாதார அதிகாரி டாக்டர் கே.கிரிசுதனின் வழிகாட்டலில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.