தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 13 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளதுடன் உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் கடந்த மாதம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் ஒரேநாளில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுவந்த நிலையில் தற்போது பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.
இதன்படி, இன்று (திங்கட்கிழமை) 12 ஆயிரத்து 772 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாத்திரம் இன்று 828 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 23 இலட்சத்து 66 ஆயிரத்து 493 பேருக்குத் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று மட்டும் கொரோனா தொற்றினால் 254 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 29 ஆயிரத்து 801ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 25 ஆயிரத்து 561 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 21 இலட்சத்து 99 ஆயிரத்து 808ஆகப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இன்னும் ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 884 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.