பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 22ஆவது லீக் போட்டியில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 8 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
அபுதாபியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும் கராச்சி கிங்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கராச்சி கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாபர் அசாம் 81 ஓட்டங்களையும் நஜிபுல்லா ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் பந்துவீச்சில், அகீப் ஜாவிட், ஹசன் அலி, மொஹமட் வசிம் மற்றும் அலிகான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 191 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, 18.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கொலின் முன்ரோ ஆட்டமிழக்காது 88 ஓட்டங்களையும் இப்தீகார் அஹமட் ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கராச்சி கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், வகாஸ் மக்சூத் மற்றும் அப்பாஸ் அப்ரிடி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 39 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இப்தீகார் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார்.