எரிபொருள் விலையை உறுதிப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய எரிபொருள் நிதியம் செயற்படுத்தப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை குறைந்துள்ளதால், அதன் மூலம் கிடைக்கின்ற பணத்தை மக்களுக்கு கொடுக்காமல், அதிலிருந்து கிடைக்கும் இலாபத்தை நிதியமொன்றுக்கு ஒதுக்குவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.
மேலும் உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்திலும், விலையை நிலையாக பேணுவதற்கும் இந்த நிதியத்தை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே எரிபொருள் நிதியம் இன்னும் செயற்படுத்தப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.