கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மங்கள இசை வாத்திய கலைஞர்கள் நாட்டில் அமுலிலுள்ள பயணத்தடையால் வாழ்வாதாரம் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர்.
தமிழரின் பாரம்பரியங்களில் மங்கள இசை வாத்தியம் ஒன்றாகும்.கோயில் நிகழ்வுகள் மற்றும் பொது நிகழ்வுகள் என நிகழ்வை மங்களகரமாக சிறப்பிப்பது மங்கள இசை வாத்திய கலைஞர்கள்தான்.
இருப்பினும் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் கோவில் நிகழ்வுகள் பொது நிகழ்வுகள் என அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளமையால் மங்கள இசை வாத்திய கலைஞர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.