கும்பமேளாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு போலியான கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கும்பமேளாவில் கலந்துகொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் முறைக்கேடுகள் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், இது குறித்து விசாரணை நடத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது.
குறித்த குழு மேற்கொண்ட விசாரணைகளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு போலி கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் ஒருவருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய கொரோனா பரிசோதனை கருவி, ஏறக்குறைய 700 பேருக்கு மேல் பயன்படுத்தப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேநேரம் போலியான முகவரிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.