நாட்டில் நேற்று மாத்திரம் 22 ஆயிரத்து 501 பேருக்கு சினோபாம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 26 ஆயிரத்து 810 பேருக்கு முதலாவது டோஸும் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், 13 இலட்சத்து 90 ஆயிரத்து 126 பேருக்கு சினோபாம் தடுப்பூசியின் முதலாம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 932 பேர் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இததேநேரம், 2 ஆயிரத்து 426 பேருக்கு நேற்று ஸ்புட்னிக் – வி தடுப்பூசியின் இரண்டாம் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் 6 ஆயிரத்து 116 பேருக்கு ஸ்புட்னிக் – வி தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 64 ஆயிரத்து 986 பேருக்கு இதுவரையில் ஸ்புட்னிக் – வி தடுப்பூசி முதலாம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.