தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.
சுமார் 4 இலட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளன. சென்னை விமானநிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட குறித்த தடுப்பூசிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஹைதராபாதில் இருந்து 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும், புனே மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து 3 இலட்சத்து 76 ஆயிரம் கொவிஷீல்டு தடுப்பூசிகளும் வந்தடைந்துள்ளன.
இந்த தடுப்பூசிகள் அனைத்தும் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.