இந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை தொடர்ந்து கவனத்தில் கொண்டிருக்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் குறித்து செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியா அதன் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் சமீபத்திய நடவடிக்கைகளை நெருக்கமாக கண்காணித்து வருகிறது.
கொழும்பு துறைமுக நகர கட்டமைப்பின் பல அம்சங்கள் தொடர்பாக இலங்கையில் எழுந்துள்ள கவலைகள் குறித்து இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.
கடல்சார் தளத்தில் பரஸ்பர பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை தொடர்ந்து கவனத்தில் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.