நாட்டில் இதுவரை 23 இலட்சத்து 91 ஆயிரத்து 683 பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நேற்று மாத்திரம் 11 ஆயிரத்து 349 பேருக்கு sinopharm தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
மேலும், sinopharm தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 43 ஆயிரத்து 40 பேருக்கு போடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று 107 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை 3 இலட்சத்து 56 ஆயிரத்து 610 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை 64 ஆயிரத்து 986 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.