2019 ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் மீது 2021 ஜூலைக்குள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
தாக்குதல் தொடர்பான 8 ஆவணங்கள் கடந்த நவம்பர் மாதம் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அனுப்பப்பட்டன என்றும் முக்கிய சந்தேக நபர்கள் மீது ஜூலை மாதத்திற்குள் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என அவர் குறிப்பிட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ளதாகக் கூறப்படும் சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி ராஜேந்திரன் இறந்துவிட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது தொடர்பாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அவர் உயிருடன் உள்ளதாய் கூறப்பட்ட சாட்சியங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பதாகவும் மூன்றாவது தடவையாக மரபணு பரிசோதனை மேற்கொள்ள சட்ட ஆலோசனை பெறப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு குண்டுத்தாக்குலை மேற்கொண்ட பயங்கரவாதிகளில் ஒருவர் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக வெளியான தகவல் குறித்து எந்த சாட்சியங்களும் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.