ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஆப்கானிஸ்தானில் ஒரு இலட்சத்து 521பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 95ஆவது நாடாக விளங்கும் ஆப்கானிஸ்தானில், இதுவரை நான்காயிரத்து 30பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 677பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 87பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 33ஆயிரத்து 65பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 124பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 63ஆயிரத்து 426பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.