டெல்டா மாறுபாட்டின் பரவல் குறித்த கவலைகள் மத்தியில் திங்கட்கிழமை முதல் பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்காக ஐந்து நாட்கள் கொவிட் தனிமைப்படுத்தலை இத்தாலி அறிமுகப்படுத்த உள்ளது.
அத்துடன், பிரித்தானியாவிலிருந்து வரும் பயணிகளும் கட்டாய கொவிட் சோதனைகள் செய்ய வேண்டியிருக்கும் என்று இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கதவுகளைத் இத்தாலி திறக்கும்.
ஆனால், பயணிகள் தடுப்பூசி போடப்பட்டவராக அல்லது சமீபத்தில் கொவிட் தொற்றுக்கு எதிர்மறையாக சோதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும்.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியும் இதேபோன்ற தடைகளை பிரித்தானிய பயணிகள் மீது பின்பற்றுகின்றன.
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் இருந்து வருபவர்களுக்கு தடை விதிக்கப்படும் என்று இத்தாலிய சுகாதார அமைச்சர் ரொபர்டோ ஸ்பெரான்சா கூறினார்.