இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது..
போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதன்போது அணித்தலைவர் விராட் கோலி 44 ஓட்டங்களுடனும், ரஹானே 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ட்ரெண்ட் போல்ட், கேல் ஜமீசன் மற்றும் நீல் வோக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
இங்கிலாந்தின் சவுத்தம்ப்டன் மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியின் முதலாம் நாள் சீரற்ற வானிலையால் முழுமையாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின்போதும் போதிய வெளிச்சமின்மை காரணமாக மூன்று சந்தர்ப்பங்களில் போட்டி இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.