செர்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, செர்பியாவில் மொத்தமாக 7,001பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 36ஆவது நாடாக விளங்கும் செர்பியாவில், இதுவரை ஏழு இலட்சத்து 15ஆயிரத்து 753பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 60பேர் பாதிக்கப்பட்டதோடு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்து 47பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 16பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஏழு இலட்சத்து ஐந்தாயிரத்து 705பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.