மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
மேலும் பெரியகல்லாறு பகுதியிலேயே அதிகளவான வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வைத்தியர் நா.மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “பெரியகல்லாறு பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 22பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரியகல்லாறு 2ஆம், 3ஆம் கிராம சேவையாளர் பிரிவுகள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு, அன்டிஜன் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பில் கடந்த 24மணி நேரத்தில் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 3 மரணங்களும் இடம்பெற்றுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.