வேல்ஸில் 40 வயதினருக்கு மொத்தம் 43.1 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, சமீபத்திய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
மொத்தத்தில், 1,517,604 பேருக்கு இப்போது இரண்டாவது அளவு செலுத்தப்பட்டுள்ளது. அதாவது இது வேல்ஸ் மக்களில் 48.1 சதவீதமாகும்.
பொது சுகாதார வேல்ஸின் தரவுகளின்படி, 2,237,710 பேருக்கு முதல் தடுப்பூசி அளவு (71 சதவீதம்) வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 14ஆம் திகதி சுகாதார அமைச்சர் எலூனட் மோர்கன், அனைத்து பெரியவர்களுக்கும் ஒரு தடுப்பூசி வழங்கப்பட்டதாகக் கூறினார். இது திட்டமிடலுக்கு ஆறு வாரங்கள் முன்னதாகவே இலக்கு எட்டப்பட்டதாகும்.
முதல் தடுப்பூசி கொடுக்கப்பட்ட மொத்த மக்கள்தொகையில் வேல்ஸ் மற்ற பிரித்தானிய நாடுகளை விட முன்னணியில் உள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்ட தரவுகளின் படி, ஸ்கொட்லாந்து அதன் மக்கள்தொகையில் 66.8 சதவீதத்துக்கும், இங்கிலாந்து 64.1 சதவீதத்துக்கும், வடக்கு அயர்லாந்து 60 சதவீதத்துக்கும் முதல் தடுப்பூசி அளவைக் கொடுத்துள்ளது.