நாட்டில் இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதன்படி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் 11 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகராஜ வலவ்வ கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவின் முதலாம் மற்றும் இரண்டாம் குறுக்கு வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி பிரிவு 4, காத்தான்குடி பிரிவு 5 தெற்கு, காத்தான்குடி பிரிவு 6 மேற்கு, புதிய காத்தான்குடி பிரிவு வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கர்பலா வீதி, ஏ.எல்.எஸ். மாவத்தை, நூரானியா பொது மயான வீதி மற்றும் கடற்கரை வீதி என்பனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.