எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என இத்தாலிய அரசாங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறைவடைந்து வரும் நிலையில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேநேரம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அரசின் இந்த தளர்வுகள் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வடமேற்கு இத்தாலியில் ஒரு சிறிய பகுதியைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் பாதுகாப்பான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இத்தாலியில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.