சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் ஆகியோர்மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியாவுடன் மறைமுகமாக மோதிவரும் பாகிஸ்தான் மறுபுறம் ஆப்கானிஸ்தானுடன் மோதிவருகிறது.
ஆப்கானிஸ்தானில் செயல்படும் தலிபான் அமைப்பு அவ்வவ்போது பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் ஆகியோர்மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும்.
ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து செயல்பட்டு வரும் எந்தவித பயங்கரவாத அமைப்பும் ஆயுத விநியோகம், மற்றும் நித உதவி செய்ய தடை விதிக்கப்படும். இதற்கு இந்தியா தீவிர முயற்சி மேற்கொள்ளும்’ எனத் தெரிவித்துள்ளார்.