சிதைந்த தேசத்தை கட்டியெழுப்புவதே ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமென கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
கட்சி தலைமையகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “நாங்கள் ஒரு தேசிய கொள்கையை கொண்டு வர முயற்சிக்க அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளோம்.
இது ஐக்கியத் தேசியக் கட்சி மற்றும் முழு நாட்டிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நாள்” என குறிப்பிட்டார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக்குவதைவிட இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவதே தமது கட்சியின் கவனம் என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.