தமிழகத்தில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நிறைவடைய சில நாட்களே உள்ள நிலையில், அதனை நீடிப்பதா அல்லது கூடிய தளர்வுகளை அளிப்பதா என்பது குறித்த ஆலோசனை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.