தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயின் அடுத்த அலை வந்தாலும், அதனை சமாளிக்க மருத்துவ குழு தயாராக உள்ளதாக, சிறப்பு மருத்துவ குழு கூறியுள்ளது.
கறுப்பு பூஞ்சை நோய் குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது.
இதனையடுத்து குறித்த குழுவினர் வழங்கிய செவ்வியில், தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை பாதிப்பு குறைந்துள்ளது. இதுவரை 2700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவு. முதலில் மருந்து தட்டுப்பாடு இருந்தது. தற்போது இல்லை. சிகிச்சைக்கு மாற்று மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இனியும் வரவுள்ளது. இதன் அடுத்த அலை வந்தாலும், அதை சமாளிக்கும் திறன் நம்மிடம் உள்ளது. இந்த நோய் பாதிப்பை சமாளிக்க மருத்துவ துறை தயாராக உள்ளது.
பாதிப்பு உடனடியாக கண்டுப்பிடிக்கப்படுவதால் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இந்த நோய் விவகாரத்தில் தமிழக அரசு வித்தியாசமான முறையை கையாள்கிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.