சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுக்கான தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு. பிரித்தானியா அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்குள் சாக்லேட், பர்கர்கள், குளிர்பானம், கேக்குகள், இனிப்புகள், ஐஸ்கிரீம், பிஸ்கட், இனிப்பு சாறுகள், சிப்ஸ்கள் மற்றும் பீஸ்ஸாக்கள் அடங்கும்.
முன்னதாக குறித்த விளம்பரங்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை 60 சதவீதம் ஒளிபரப்பப்பட்டு வந்தன.
ஆனால் புதிய கட்டுப்பாட்டின் படி, இந்த விளம்பரங்களை இனி இரவு 9 மணி வரை ஒளிபரப்பு செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒன்லைன் விளம்பரத்தில் புதிய விதிகளும் இருக்கும். ஆனால் இந்த உணவை விற்கும் நிறுவனங்கள் இன்னும் வலைத்தளங்களை இயக்க முடியும்.
பிரித்தானியாவில் பெரியவர்களில் கால் பகுதியினருக்கும் அதிகமானவர்களை அதிக உடல் பருமன் பாதிக்கிறது. இந்தநிலையில் அரசாங்கம் இந்த முடிவினை எடுத்துள்ளது.