பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள இந்த காலத்தில் மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால் மாத்திரமே நாட்டை மீண்டும் முடக்குவதில் இருந்து தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வைத்தியர் சுசி பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள கொரோனா வகையை விட டெல்டா வகை கொரோனா 60 -70 வீதம் அதிகமாக பரவக்கூடியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள இந்த காலத்தில் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.