ஜம்மு விமான நிலையத்திலுள்ள இந்திய விமானப்படையின் தொழில்நுட்ப பிரிவுக்கு முன்னால் குண்டு வெடிப்புச் சம்பவமொன்று நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வெடிகுண்டு நிபுணர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஜம்முவின் மற்றொரு பகுதியில், 5 கிலோ வெடி பொருட்களுடன் பயங்கரவாதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.