சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை மீறியமைக்காக மாட் ஹன்கொக், தான் வகித்த சுகாதார அமைச்சின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இராஜினாமா தொடர்பாக பிரதமருக்கு நேற்று (சனிக்கிழமை) கடிதம் மூலம் மாட் ஹன்கொக் அறிவித்துள்ளார்.
அதில், தொற்று காலத்தில் இவ்வளவு தியாகம் செய்த மக்களுக்கு கடமைப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் மாட் ஹன்கொக்கின் இராஜினாமா முடிவு குறித்து வருந்துவதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் அதிபர் சஜித் ஜாவிட் சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்படலாம் என டவுனிங் தெரு தகவல்களை மேற்கோளிட்டு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.