கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இல்லாத பல அறிகுறிகள் டெல்டா பிளஸ் திரிபு வைரசில் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாறுபாட்டால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிக அளவிலான சோர்வு ஏற்படுகின்றது.
இதற்கு முன்னர் இருந்த மாறுபாடுகளைவிட டெல்டா பிளஸ்ஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு மிகவும் வேகமாக உடல்நிலை மோசமாவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்டா பிளஸ் மாறுபாட்டில், வழக்கமான உலர்ந்த இருமல், காய்ச்சல், சோர்வு, உடல் வலி, தோல் வெடிப்பு, கால்விரல்கள் மற்றும் கைவிரல்களின் நிறமாற்றம், தொண்டை வலி, வெண்படல அழற்சி, சுவை மற்றும் வாசனை இழப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி, மார்பு வலி, மூச்சுத் திணறல் , பேசுவதில் சிரமம், வயிற்று வலி, குமட்டல், பசியின்மை, வாந்திm மூட்டு வலி, காது கேளாமை போன்ற அறிகுறிகள் காணப்படும் என ஆரம்ப ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
இதனைப் பாதுகாக்க எடுக்கக்கூடிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
- தனி மனித இடைவெளி, இரட்டை முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல்
- வெளியில் செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருப்பது நல்லது.
- மிகவும் தேவைப்பட்டால் மட்டுமே வெளியே செல்லுங்கள்.
- கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்லவும்.
- குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருப்பது நல்லது.
- தடுப்பூசிக்கு கண்டிப்பாக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்
அரசாங்கத் தகவல் திணைக்களம்