தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் மூழ்கியுள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீன்பிடிப் படகுகள் உள்ளிட்ட உடைமைகளுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த தடையை நீக்குவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நீர்கொழும்பு, கொழும்பு, பாணந்துறை மற்றும் களுத்துறை கடற்பிராந்தியங்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கடந்த மே மாதம் 22ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















