கொரோனா தொற்றின் மூன்றாவது அலையைத் தடுக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
மத்திய அமைச்சர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்திய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக , அந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘போர்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணியைச் செய்ய வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மூன்றாவது அலையைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன், தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை எவ்வாறு சிறந்த முறையில் கொண்டு செல்வது குறித்து மக்களிடம் கருத்துக்களை பெற வேண்டும் எனத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.