அரச சேவையில் பணியாற்றும் மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை இதற்கு முன்னர் 61 ஆக இருந்த நிலையில், குறித்த வயதெல்லை 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20ம் திகதி, மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 63ஆக நீட்டிக்க ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.