இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 360 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 4 இலட்சத்து 53 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 95 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் 5 இலட்சத்து 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்று ஒரேநாளில் 796 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது.