கனடா- அல்பர்ட்டாவின் பல பகுதிகள் இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வறட்சி காரணமாக, பல இடங்களில், விரைவாக வளர வேண்டிய பயிர்கள் பழுப்பு நிறமாக மாறத் தொடங்குகின்றன. தற்போது பல விவசாயிகள் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்கரி பகுதி ஜனவரி 1ஆம் திகதி முதல் அதன் சாதாரண மழையின் மூன்றில் இரண்டு பங்கைப் பெற்றுள்ளது. அதாவது, இதுவரை 117.7 மிமீ மழை வீழ்ச்சி என்று சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.
வறட்சி நிலைமை வெப்பத்துடன் தொடர்ந்து மோசமடைந்துவிட்டால், விவசாயிகள் தங்கள் மந்தைகளில் சிலவற்றை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது மாகாணத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் எதிர்கொள்ளும் ஒரு சவாலாக தற்போது மாறியுள்ளது.
அத்துடன் பன்றி வளர்ப்பாளர்கள், காற்றோட்டத்தை வைத்திருக்க களஞ்சியங்களில் பெரிய காற்றோட்டம் விசிறிகளை பொருத்தியுள்ளதாக அல்பர்ட்டா பன்றி வளர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கனடாவில், 49.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்த நிலையில், அங்கு 486க்கும் மேற்பட்டோர் அதிக வெயில் காரணமாக உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.