நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை ஒன்றை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாணயத்தாள்களை அச்சிடுவதன் ஊடாக மாத்திரம் நாட்டை அபிவிருத்தி செய்து விட முடியாது என்பதை அரசாங்கம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது நாடு, பாரிய பொருளாதார பின்னடைவை முதன் முறையாக சந்தித்துள்ளது. அதனை கட்டியெழுப்புவதற்கு உடனடி நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் நாணயத்தாள்களை அச்சிடுவதன் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதுடன் இலங்கை ரூபாயின் நாணய பெருமதி மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது என ஹர்ஷ டி சில்வா கவலை வெளியிட்டுள்ளார்.
ஆகவே, இந்த விடயத்தில் உரிய தீர்வொன்றினை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.