இலங்கையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மொத்தம் 85,683 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 1,350 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 383,329 பேர் ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 26,192 பேருக்கும் இரண்டாவது டோஸ் 58,141 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.
எனவே இதுவரை 1,876,203 பேருக்கு முதல் டோஸ் சினோபோர்ம் தடுப்பூசியும் 808,743 பேருக்கு சினோபோர்ம் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.