இந்தியாவில் கூடுதலாக இரண்டு தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன.
ஏற்கனவே இமாச்சலபிரசேதம் Kasauliயிலும் , நொய்டாவிலும் தடுப்பூசி ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ள நிலையில், தற்போது ஐதராபாத் மற்றும் புனேவில் கூடுதலாக ஆய்வகங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிக்கான கொள்முதல் மற்றும் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு கூடுதல் ஆய்வகங்கள் மூலம் விரைவான சோதனை மற்றும் தடுப்பூசி பயன்பாட்டுக்கான முன் சான்றிதழுக்கு உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்க பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
நாட்டின் தேவைக்கு ஏற்ப புதிய கொரோனா தடுப்பூசிகள் ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.