கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக மேலும் 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47,922 என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது ஏராளமான மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறிவியமையை அவதானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளை மீறி ஷொப்பிங் மால்கள் மற்றும் கடைகளில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு நடைமுறைகளை மீறுபவர்களைக் கைது செய்ய இன்று விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே மாகாண எல்லைகளை கடக்க முடியும் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.